Friday 31 May 2019

ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தை அறிவது எப்படி?

May 31, 2019
ஜாதகம் என்பது ஒரு மனிதன் பிறக்கும் போது வான்வெளியில் அமைந்துள்ள கிரகங்களின் துல்லிய நிலையை குறிக்கிறது.
ஜாதகம் ஒருமனிதன் பிறக்கும் போது உள்ள கிரக நிலையை தான் குறிக்கிறது ஆனால் ஒரு மனிதனின் நிறம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நிர்ணயம் செய்யபட்டு விடுகிறது எனவே எவ்வாறு மனிதனின் நிறத்தை அறிய முடியும் என உங்களுக்கு ஐயம் எழலாம்..

ஆனால் இதற்கு விளக்கம் மிக எளிது நீங்களும் நானும் எப்போது எந்த இடத்தில் யாருக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வேண்டும் என்பதை ஏற்கனவே நம்மை படைத்த கடவுள் முடிவு செய்து விடுகிறார் எனவே நாம் எந்த நிறத்தில் இருக்கிறோமோ அதறக்கான கிரக நிலைகள் உருவாகும் போதுதான் நாம் பிறக்கிறோம் எனவே ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தையும் அறிய முடியும்...

உடல் நிறத்தை அறிய நவாம்சம் மிக முக்கியம் மேலும் இந்த விதியை இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும்‌.
ஜாதகத்தில் லக்னம் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளது, ராசி நாதன், சந்திரன் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளார் ஆகியவையை கணக்கிட்டு ஜாதகரின் நிறத்தை அறிய முடியும்.

குருவின் வீடுகளான மீனமும் தனும் மிளிர்ந்த தங்க நிறத்தை குறிக்கும், செவ்வாயின் வீடுகளான மகரமும் விருச்சிகமும் செந்நிறத்தை குறிக்கும், சுக்கிரனின் ரிஷப துலாம் ராசிகள் வெள்ளை நிறத்தையும், புதன் பொதுவான நிறத்தையும் சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் போது வெளிர் நிறத்தையும் அம்மாவாசைக்கு அருகில் இருக்கும் போது பெதுவான நிறத்தையும் குறிப்பார், சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தையும் சனி அடர்ந்த கருப்பு நிறத்தையும் குறிப்பார்கள்.

முதலில் லக்னம் எந்த நவாம்சத்தில் உள்ளது என காண வேண்டும் நவாம்ச லக்னம் சனியின் மகர கும்ப வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் கருப்பாக இருப்பார், குருவின் வீடுகளில் நவாம்ச லக்னம் அமையும் போது நல்ல நிறத்துடன் இருப்பார்.

மற்ற அமைப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் சந்திரன் நம் உடலை குறிக்கிறார், சந்திரன் அமந்த ராசி அதிபதி சனி ஆக இருந்தால் கருப்பாக இருப்பார் மற்ற கிரகங்களாக இருக்கும் போது அந்த கிரகத்தின் தன்மை நிறத்தில் இருப்பார்...

இதில் ஒரு அமைப்பில் ஜாதகர் நல்ல நிறம் உள்ளவர் என்றும் மற்றும் ஒரு அமைப்பில் ஜாதகர் கருமை நிறம் உள்ளவர் என்ற அமைப்பும் வரும் போது ஜாதகர் பொதுவான நிறம் உள்ளவர் என கொள்ள வேண்டும்..

1) நவாம்ச லக்னம்
2) ராசி அதிபதி
3) சந்திரன் நவாம்சத்தில் அமர்ந்த ராசி

இதில் 3ம் நல்ல நிறமுடைய அமைப்பில் இருக்கும் போது ஜாதகர் நல்ல வெள்ளை நிறம் உடையவராக இருப்பர்‌. 2 அமைப்பு நல்ல நிறமுடையவை மற்றொன்று கருமை நிற அமைப்பு எனில் ஜாதகர் பொது நிறத்திற்கு சற்று அதிக நிறத்தில் இருப்பார். இவ்வாறு கணக்கிட வேண்டும்..
குறிப்பு: நவாம்ச லக்னம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மாறுபடும் எனவே துல்லியமான பிறந்த நேரம் தேவைப்படும்

Wednesday 22 May 2019

ஏழரைச்சனி கெடுதல் மட்டும்தான் செய்யுமா?

May 22, 2019

ஏழரைச்சனி

சனி கோட்சாரமாக ஜென்ம ராசிக்கு முந்தய ராசியிலும், ஜென்ம ராசியிலும் ஜென்ம ராசிக்கு 2ல் வருவதுமான ஏழரை வருடங்கள் ஏழரைச்சனி காலம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்களாக நகர்வார்.

இதில் முதல் இரண்டரை வருடங்களில் அதாவது ஜென்ம ராசிக்கு முந்தய ராசியில் இருக்கும் போது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருக்வாக்கும் சூழ்நிலைகளைதான் உருவாக்குவார் தவிற பெரும்பாலும் பிரச்சனைகளை தருவதில்லை, உதாரணமாக ஒரு வாலிபன் வேலைப்பார்க்கும் இடத்தில் அல்லது கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்த ஏழரைச்சனி தொடங்குகிறது எனில் ஏழரை வருங்களில் முதல் இரண்டரை வருடங்கள் ஜாதகருக்கு காதல் தோன்றும் இதிலும் துல்லியமாக சொல்ல போனால் அந்த இரண்டரை வருடங்களில் முதல் ஒரு வருடத்தில் பெண்களின் நட்பு ஏற்படும் அடுத்த ஒன்றரை வருடங்களில் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் தோன்றும்..

Source: Google

இத்தகைய காலகட்டத்தில் எந்த விதமான பெரிய பிரச்சனைகளோ , தொந்தரவுகளோ இருக்காது, இரண்டாவது இரண்டரை வருடத்தில் தான் பிரச்சனைகள் வரும் இந்த காலத்தில் மிகுந்த மன அழுத்தம் ஏற்படலாம்.. வாழ்நாள் முடியும் வரை இந்த காலத்தில் நடந்தவை ஜாதகருக்கு நினைவு இருக்கும்..

இதில் இன்னும் துல்லியமாக சொல்ல போனால், ஜென்ம நட்சத்திரத்திற்கு முந்தய நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு எதிராக பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும் அல்லது ஜாதகருக்கு எதிராக ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் வலுவடையும். ஜென்ம நட்சத்திரத்தை சனி கடந்த பின் தோன்றிய பிரச்சனைகள் மிகவும் மெதுவாக மறைய தொடங்கும்.
கடைசி இரண்டரை வருடங்களில் ஜாதகர் பல அனுபவங்களை கடந்த கால வாழ்க்கை மூலம் கற்றிருப்பார்.

இதில் காதல் என்பது ஒரு எடுத்துக்காட்டாக தான் சொல்லப்பட்டுள்ளது, பெரும் பண கஷ்டமும், தொழிலில் பிரச்சனைகளும் இந்த கால கட்டங்களில் ஏற்படலாம்.
எந்த பிரச்சனை ஏழரை சனி காலத்தில் வரும் என்பதை அப்போது ஜாதகருக்கு நடக்கும் தசா புக்திகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் எது பாதிக்கப்பட்டால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆவாரோ அது சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்..

ஒரு கல்லூரி முடித்த வாலிபர் காதலில் எந்த பிரச்சனை வந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆக மாட்டார் எனில் அவருக்கு காதல் விவகாரங்களில் பிரச்சனை வராது, வேறு எதில் பிரச்சனை வந்தால் ஜாதகருக்கு மன அழுத்தம் வருமோ அதில் தான் பிரச்சனைகள் உண்டாகும்.

ஏழரை சனி நடைபெரும் காலங்களில் காதலிக்கவோ , புதிய தொழில் தொடங்கவோ, இருக்கும் வேலையை விடுவதோ, புதிய முயற்சிகள் மேற்கொள்வதையோ தவிர்த்தல் நலம். யாரையும் நம்பி முன்பணமோ , பணமோ கொடுக்க கூடாது
சில நேரங்களில் குழந்தைகளின் ஏழரை சனி தகபனையும் தாயையும் பாதிக்கும், ஆனால் அந்த நேரத்தில் தாயின் ஜாதகத்திலும், தகப்பனின் ஜாதகத்திலும் கஷ்டபடும் அமைப்பு இருந்தால் மட்டுமே இது பெரும்பாலும் நடைபெரும்.

ஏழரைசனிக்கு விதிவிலக்கு இல்லையா?

கண்டிப்பாக ஜோதிடத்தில் ஒரு  விதிக்கு பல விதி விலக்குகள் உண்டு. ஜாதகத்தில் சனி வலிமை குறைந்து சுபர்களின் சம்மந்தம் பெருவது, பாபர்களில் சம்மந்தம் பெறாமல் சுபர்களின் வீட்டில் அமர்வது, நவாம்சத்தில் சுபர்களுடன் சேர்ந்து சுபர்களின் வீட்டில் இருப்பது, லக்னத்திற்கு 6,8,12ல் மறைந்து கேது சம்மந்தம் பெருவது போன்ற நிலைகளில் சென்ம ஜாதகத்தில் சனி இருந்தாலும்,
ஜென்ம ராசி மகரம், கும்பமாக இருந்து சனி பாபர்களின் சம்மந்தம் பெறாமல் இருந்தாலும் ஏழரை சனியில் தாக்கம் குறைவாக இருக்கும்.
அதே நேரத்தில் ஜென்ம ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று பாவர்களின் சம்மந்தம் பெற்று, நவாம்சத்திலும் பாவர்களின் சம்மந்தம் பெறுவது ஆகியவை ஏழறை சனியின் தாக்கத்தை அதிகரிக்கும்..

ஏழரை சனி பரிகாரங்கள்

ஏழரைசனி காலங்களில் சனியின் ஸ்தலங்களுக்கு செல்ல கூடாது. உடல் ஊனம் பெற்றவர்களுக்கு சனி கிழமைகளில் பகல் 1 முதல் 2 மணிவரை உதவிகள் செய்யலாம்,
அருகில் இருக்கும் பழைய சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நெய் தீபம் சனி கிழமைகளில் காலை 6 to 7 மணிவரை ஏற்றலாம்...

Saturday 23 February 2019

2ல் குருவிற்கு காரக பாவ நாஸ்தி ?

February 23, 2019
ஒவ்வொரு கிரகமும் தனக்கென்று பல காரத்துவங்களை கொண்டிருக்கும்‌ அதே போல் 12 பாவங்களும் தனக்கென்று பல ஆதிபத்தியங்களை கொண்டிருக்கும்..

உதாரணமாக சுக்கிரன் திருமணத்திற்கு காரகர் ஆகிறார்.. அதே போல் 7ம் பாவம் திருமணத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறது..

இங்கு... ஆதிபத்தியமும் காரகமும் இணைவது காரக பாவ நாஸ்தி என படுகிறது.. அதாவது திருமணத்திற்கு காரகனான சுக்கிரன் திருமணத்திற்கு ஆதிபத்தியம் கொண்ட 7ல் இடத்தில் இருப்பது காரக பாவ நாஸ்தி எனப்படுகிறது...

காரக பாவ நாஸ்தி அடையும் போது அந்த பலன் நடப்பதில் பிரச்சனைகள் உண்டாகும், தாமதம் உண்டாகும்...

எனவே தான் தனித்த சுக்கிரன் 7ல் இருக்க கூடாது என சொல்வதும் தனித்த குரு 5ல் இருக்க கூடாது என சொல்வதும் ஆகும்..

இதற்கு சில விதி விலக்குகளும் இருக்கின்றன...

1) வேறு கிரகங்கள் சம்மந்தம் அந்த பாவத்தில் இருந்தால் காரக பாவ நாஸ்தி வேலை செய்யாது..

2) அங்கு காரக பாவ நாஸ்தி அடையும் கிரகம் ஆட்சி பெற்றால் விதி விலக்காக கொள்ளலாம்...

இப்போது குரு தனம் என்பதற்கு காரகம் வகிக்கிறார். 2ம் இடம் தனத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.. இங்கு குரு அமர்ந்தாலும் காரக பாவ நாஸ்தியை ஏற்படுத்துவார்...

ஆனால் 2ம் ஆதிபத்தியத்தில் இருக்கும் தன்னுடைய காரகத்தை மட்டுமே பாதிப்பார்...
2ம் இடத்தில் இருக்கும் குடும்பம் , பேச்சி, வலது கண் ஆகியவற்றை எந்த பாதிப்பும் தர மாட்டார்...

அதே போல் 7ல் அமரும் சுக்கிரன் திருமணம் என்பதை மட்டுமே பாதிப்பை தருவார், 7ம் இடத்தின் மற்றொரு ஆதிபத்தியமான கூட்டு தொழிலுக்கு எந்த தீமையும் செய்ய மாட்டால்..

ஆனால் 5ல் அமரும் குரு... 5ல் இருக்கும் அனைத்தையும்‌ கெடுப்பார் காரணம் 5ம் இடத்தில் இருக்கும் அனைத்து ஆதிபத்திய பலன்களும் குருவின் காரத்துவத்திலையே வந்துவிடும்...

இவ்வாறு ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்படும் காரக பாவ நாஸ்தி பலனை கணிக்கலாம்...

இதுபோன்ற மேலும் பல தகவல்களுக்கு www.jothidasanmugan.blogspot.com என்ற தளத்தில் சென்று படிக்கவும்.

Sunday 17 February 2019

ராஜ யோகம் தரும் ராகு திசை

February 17, 2019
வணக்கம் நண்பர்களே...

ஜோதிடத்தில் ராகுவின் நிலைகளையும், நன்மை தீமை தருவதையும் பற்றி கணிப்பது சற்று சிரமமான விசயம்...

ஏன் எனில் ராகு திசை சில நிலைகளில் ஒருவரை கோடிகளுக்கு அதிபதி ஆக்கும் ..
அதே நேரம் வேறு சில நிலைகளில் கோடிகளுக்கு அதிபதியை கூட பிச்சை காரனாக்கும்...

பொதுவாக ஒரு லக்கத்திற்கு சில கிரக்ங்கள் நன்மை செய்யும் என்றும் சில கிரகங்கள் நன்மை செய்யாது என்னும் எடுத்துக்கொள்ளலாம்...

உதாரணமாக மீன லக்னத்திற்கு செவ்வாய் பெரும்பாலும் நன்மையையே செய்வார்....

அதே நேரம் மீன லக்னத்திற்கு சுக்கிரன் கெடுதல்களை செய்வார்...

இவ்வாறு ஒவ்வொரு லக்னத்திற்கும் பார்த்துக்கொள்ள முடியும்...

அதே நேரத்தில் ராகு, கேதுக்கள் இந்த லக்னத்திற்கு நன்மை செய்வார் இந்த லக்னத்திற்கு தீமை செய்வார் என கூறிவிட முடியாது...

ராகு நன்மை செய்ய வேண்டும் என்றால் அவர் 3,6,11,12ல் இருக்க வேண்டும்...
சரி இதில் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.

6, 12ல் இருக்கும் ராகு சுபர்களின் பார்வையை பெற கூடாது அதே நேரத்தில் 3,11ல் இருக்கும் ராகு சுபர்களின் சம்மந்தத்தை பெற‌ வேண்டும்...

அதே போல் ராகு ராஜ யோகத்தை செய்ய வேண்டும் எனில் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனம் ஆகிய வீடுகளில் இருக்க வேண்டும்...

மேலும் இந்த வீடுகள் லக்னத்தில் இருந்து 3,6,11,12 ஆக இருக்க வேண்டும்...

எந்த நிலையிலும் ராகு கேதுக்கள் லக்ன பாவரின் சம்மந்தம் பெற கூடாது...
 உதாரணமாக தனுசு லக்னமாக அமைந்து 6ம் வீடான ரிஷபத்தில் ராகு கேது அமர்ந்தால் ராகு சுக்கிரன் என்ன பலன்களை தனுசு லக்னத்திற்கு கொடுப்பாரோ அதே பலன்களைதான் கொடுப்பார் காரணம் ராகு இருப்பது சுக்கிரனின் வீடு....

இங்கு ராகு 6ல் இருந்தால் நன்மை செய்வார் என்ற விதி பொருந்தாது...

ராகு கேந்திரங்களில் இருப்பது கூட சிறப்புதான் ஆனால் கேந்திரத்தில் இருக்கும் போது திரிகோணாதிபதியின் சம்மந்தம் பெற வேண்டும்...

இந்நிலைகளில் ராகு கேந்திர திரிகோண பலன்களை அள்ளி கொடுப்பர்...

அதே போல் திரிகோணத்தில் ராகு இருப்பது சிறப்பு இல்லை என்றாலும் அங்கு ஒரு கேந்திராதிபதியுடன் சேர்க்கை பெறுவது ராகுவை நன்மை செய்ய வைக்கும்...

ராகு மிக பெரிய நன்மைகளை செய்ய வேண்டும் எனில் 3,11ல் இருந்து அந்த வீடுகள் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனமாக இருந்து லக்ன சுபர்களின் பார்வை அல்லது சம்மந்தம் பெற்று சுபர்களின்‌ சம்மந்தத்தையும் பெற வேண்டும்...

இதுவே... ராகு பூரணமாக ராஜ யோகம் செய்யும் அமைப்பு....

இதற்கு அடுத்தபடியாக... 6,12ல் இருந்து
அந்த வீடுகள் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனமாக இருந்து ராகுவிற்கு எல்லா கேந்திரங்களிலும் லக்ன சுபர்கள் பலம் பெற்று இருக்க வேண்டும்...

இந்த நிலைகளில் ராகு மிக பெரிய‌ராஜ யோகங்களை தன் திசைகளில் செய்வார்...அதே நேரம் ராகு 6,12ல் இருந்து சுபர்களின் சேர்க்கை பார்வை பெறும்‌ போது அந்த பாவம் பலம் பெற்று கடன், நோய், விரயம் ஆகியவை ஏற்படும்...

இந்நிலைகளில் ராகுவின் கேந்திரத்தில் லக்ன சுபர்கள் இருப்பின் கலப்பு பலன்கள் ஏற்படும்...

Sunday 10 February 2019

ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? -- பகுதி 2

February 10, 2019
வணக்கம் நண்பர்களே....

உங்கள் ஜாதகத்தில் ராஜ யோகம் உள்ளதா ? என்ற தலைப்பில் இது இரண்டாவது பதிவு....

முதல் பதிவை படிக்காதவர்கள் கீழே உள்ள link ல் சென்று படித்துவிட்டு வரவும்....

Link: https://goo.gl/ZQNtwE

முதல் பதிவில் சில அடிப்படையான அமைப்புகளை சென்ற பகுதியில் பார்த்தோம்... தற்போது இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்....  முதலில் நாம் ராஜ யோகத்தை அடைய வேண்டும் எனில் ஒரு கலையை கற்று அந்த கலையின் மூலம் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும், அதன் பின் ராஜ யோகமானது தானாகவே நம்மிடம் வந்துவிடும்...

இங்கு உதாரணத்திற்கு திரு. ரஜினி யின் ஜாதகத்தையே பார்கலாம்...



இந்த ஜாதகத்தில் குரு லக்னத்தை 7 ம் இடத்தில் இருந்து பார்ப்பதை கவனியுங்கள்....  எனவே முதல் விதி ஒத்து வருகின்றது...

குரு எந்த நிலையில் இருந்தும் லக்னத்தை பார்த்தால் போதுமா ? குருவின் வலு முக்கியம் இல்லையா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்...

ஆனால் இங்கு குரு 7 ல் சனியின் வீட்டில் பகை நிலையில் இருந்தாலும் அம்சத்தில் மூலதிரிகோண வலுவில் உள்ளார்...

ஒருவரை ராஜ யோகம் பெற வைப்பதில் குருவிற்கு முக்கிய பங்கு உண்டு..
இதை நீங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ள அனைவரின் ஜாதகத்திலும் காணலாம்...

அடுத்ததாக இவர் தேர்ந்தெடுத்த கலை நடிப்பு... நடிப்புக்கு காரகன் சுக்கிரன் இரண்டாவதாக ராகுவையும் சந்திரனையும் எடுத்துக் கொள்ளலாம்....

இங்கு சுக்கிரன் 5ம் இடமான குருவின் தனுசு வீட்டில் புதனுடன்‌ சேர்ந்து உள்ளார்...

ஒருவர் ராஜ யோகத்தை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்ன பாவிகள் லக்ன சுபரின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்...

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜாதகருக்கு நன்மைகளை அந்த கிரகம் தரும்...

இங்கு சுக்கிரன் லக்ன நண்பரான புதனுடன் சேர்ந்து மற்றொரு லக்ன நண்பரான குருவின் வீட்டில் உள்ளார்...

எனவே இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன் நன்மை செய்து ஆக வேண்டும்...

அடுத்ததாக மிக மிக முக்கியமான விதி சரியான பருவத்தில் சரியான திசைகள் நடக்க வேண்டும்...

ஜாதகத்தில் 1000 ராஜ யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க சரியான பருவத்தில் சரியான திசா புக்திகள் நடைபெற வேண்டும்..

ரஜினியின முதல் படம் 1975ல் வெளியானது... அப்போது அவருக்கு ராகு தசை புதன் நடந்துக்கொண்டிருந்தது.

ஏற்கனவே ராகுவை 2வது சினிமா துறை காரகனாக கொள்ளலாம்‌ என கூறியிருந்தேன் அல்லவா...

எந்த ஒரு கிரகமும் ஜோதிடத்தில் தனித்து இயங்கி எந்த செயலையும் செய்யாது... 

அடுத்த விதியாக பாப கிரகங்கள் சுபர்களின் சம்மந்தத்தில் இருக்க வேண்டும்....

அனைத்து பாப கிரகங்களுக்கும் சுப காரத்துவங்களும் அசுப காரத்துவங்களும் இருக்கும்...

சுபர்‌ சம்மந்தப்பட்டு திசை நடத்தும் போது தனது சுப காரத்துவத்தையும் அசுபர் சம்மந்த பட்டு தசை நடத்தும் போது தனது அசுப காரத்துவத்தையும் ஜாதகருக்கு கொடுக்கும்..‌‌‌...

உதாரணமாக ஒரு கீழ் நிலையில் உள்ள கட்டிட தொழிலாலருக்கும் ஒரு Civil Engineers க்கும் செவ்வாயே காரகர்...

இங்கு ரஜினியின் ஜாதகத்தில் ராகு தனக்கு பிடித்த மீனத்தில் குருவின் வீட்டில் உள்ளார்...

எனவே தனது சுப பலனாக ஜாதகரை சினிமா துறையில் அறிமுக படுத்தினார்...

இல்லை எனில் ஜாதகர் பேருந்து கன்டெக்டர் வேலையிலையே இருந்திருப்பார்....

எனவே ஒருவர் ராஜ யோகத்தை பெற லக்னம் வலுத்து ஜாதக யோகாதிபதிகள் அனைவரும் பலம் பெற்று... 
லக்ன அவயோகர்கள் லக்ன சுபரின் கட்டுபாட்டில் இருந்து, பாவர்களான சனி, செவ்வாய், ராகு ஆகியோர் சுப வலுவுடன் நன்மை செய்யும் அமைப்பில் இருக்க வேண்டும்...
ஜாதகர் எந்த கலையை அல்லது தொழிலை தேர்ந்து எடுக்கிறாறோ அந்த கிரகம் மிக மிக மேன்மையான நிலையில் இருக்க வேண்டும்....

இதற்கு மேலாக நன்மை தரும் தசாபுக்திகள் சரியான வயதில் நடக்க வேண்டும்

அய்யோ... இவ்வளவு இருக்கிறது என நினைக்க தோன்றுகிறதா? ...
ராஜ யோகம் அவ்வளவு எளிதாக கிடைக்காது அல்லவா.....

Saturday 9 February 2019

ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? -- பகுதி 1

February 09, 2019
வணக்கம் நண்பர்களே,

உலகில் பிறக்கும் அனைவருக்கும் ராஜ யோகமானது கிடைத்துவிடுவது இல்லை. உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ராஜ யோகங்களை அனுபவிக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது, அவர்களின் ஜாதக அமைப்பு எவ்வாரு இருக்கும் எண்பதை இன்றய பதிவில் காணலாம்...

ராஜ யோகத்தை அனுபவிக்க முதலில் ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுவாக இல்லை எனில் ஜாதகருக்கு ராஜ யோகத்தை பெறும் ஒரு வாய்ப்பு வந்தால் கூட ஜாதகர் அதை பயன்படுத்தமாட்டார் மாறாக எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறியாக ஜாதகர் இருப்பார்...

சில நிலைகளில் மிக அதிர்ஷ்டமானவர்களின் ஜாதகத்தை பார்த்தீர்கள் எனில் அவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமாகி இருப்பார். இருப்பினும் இவர் எவ்வாறு ராஜ யோகத்தை அனுபவிக்கிறார் என நீங்கள் கேட்கலாம்...

கண்டிப்பாக அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி நீச பங்கம் ஆகியிருப்பார். இத்தகையவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து பார்தீர்களானால் அவர்கள் இளமையில் மிக வறுமையில் அல்லது கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்திருப்பார்...

ஒரு கிரகம் ஆட்சி உச்சம் என்றவுடன் நமது ஜாதகம் யோக ஜாதகம் என நினைத்துவிட கூடாது...
உதாரணமாக அரச லாபத்தையும், அரசு பதவிகளையும் குறிக்கும் கிரகம் சூரியன், சூரியன் சித்திரை மாதம் முழுவதும் மேசத்தில் உச்ச நிலையில் இருப்பார்... எனவே அந்த சித்திரை‌ மாதத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ஜெயலலிதா போலவோ கருணாநிதி ஆகவோ மாறிவிடுவதில்லையே...

ஒரு முழூ ராஜ யோகத்தை அனுபவிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பல ராஜ யோக விதிகள் ஜாதகத்தில் ஒத்துவர வேண்டும்...

இதில் முதல் விதி தான் லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும்...
சில நிலைகளில் லக்னாதிபதி வலு அற்று இருப்பின் ராசி அதிபதி பலமாக இருக்க வேண்டும்...
இந்த நிலைகளில் இன்னும் பல தெளிவான யோகங்கள் இருந்தால் தான் ராஜ யோகம் கிடைக்கும்...

அடுத்ததாக குரு பார்வை லக்னம், லக்னாதிபதி, ராசி மற்றும் ராசி அதிபதி ஆகியவற்றிற்கு கிடைக்க வேண்டும். குறைந்தது இதில் 2க்கு அல்லது அதற்கு  அதிகமான இடங்களையாவது பார்க்க வேண்டும். இவை அனைத்தையும் குரு பார்ப்பது அரிதான ஒன்றுதான் இருப்பினும் ராஜ யோகத்தை அனுபவிக்கும் ஒருவர்‌ பிறப்பதும் அரிது தானே...

இத்தகைய நிலைமைகள் ஜாதகத்தில் இருந்தாலே ஜாதகர் ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்..

இதன் பின் அவர் எந்த துறையில் உச்சத்தை அடைவார் அல்லது ராஜ யோகத்தை பெருவார் என்பதை இதற்கு அடுத்தாக ஜாதகத்தில் உள்ள யோக அமைப்புகளே தெரிவிக்கும்.

உதாரணமாக ஒருவர் சினிமா துறையில் ஜொலிக்க வேண்டும் எனில் அவரது‌ ஜாதகத்தில் சுக்கிரனும் ராகுவும் நல்ல நிலையில் இருக்க வேண்டும்...

ஒருவர் அரசாங்கத்தில் உயர் பதவிகளில் வகிக்க வேண்டும் எனில் சூரியனும், சிம்ம ராசியும் நல்ல நிலையில் இருந்து மேற்சொன்ன விதிகளும் ஜாதகத்தில் பொருந்தி வர வேண்டும்....

இதில் உள்ள இன்னும் சூட்சமான‌ விசியங்களை ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா ? பகுதி 2 ல் காணலாம்....