Sunday 10 February 2019

ராஜ யோகம் உங்கள் ஜாதகத்தில் உள்ளதா? -- பகுதி 2

வணக்கம் நண்பர்களே....

உங்கள் ஜாதகத்தில் ராஜ யோகம் உள்ளதா ? என்ற தலைப்பில் இது இரண்டாவது பதிவு....

முதல் பதிவை படிக்காதவர்கள் கீழே உள்ள link ல் சென்று படித்துவிட்டு வரவும்....

Link: https://goo.gl/ZQNtwE

முதல் பதிவில் சில அடிப்படையான அமைப்புகளை சென்ற பகுதியில் பார்த்தோம்... தற்போது இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்க்கலாம்....  முதலில் நாம் ராஜ யோகத்தை அடைய வேண்டும் எனில் ஒரு கலையை கற்று அந்த கலையின் மூலம் புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும், அதன் பின் ராஜ யோகமானது தானாகவே நம்மிடம் வந்துவிடும்...

இங்கு உதாரணத்திற்கு திரு. ரஜினி யின் ஜாதகத்தையே பார்கலாம்...



இந்த ஜாதகத்தில் குரு லக்னத்தை 7 ம் இடத்தில் இருந்து பார்ப்பதை கவனியுங்கள்....  எனவே முதல் விதி ஒத்து வருகின்றது...

குரு எந்த நிலையில் இருந்தும் லக்னத்தை பார்த்தால் போதுமா ? குருவின் வலு முக்கியம் இல்லையா என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்...

ஆனால் இங்கு குரு 7 ல் சனியின் வீட்டில் பகை நிலையில் இருந்தாலும் அம்சத்தில் மூலதிரிகோண வலுவில் உள்ளார்...

ஒருவரை ராஜ யோகம் பெற வைப்பதில் குருவிற்கு முக்கிய பங்கு உண்டு..
இதை நீங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ள அனைவரின் ஜாதகத்திலும் காணலாம்...

அடுத்ததாக இவர் தேர்ந்தெடுத்த கலை நடிப்பு... நடிப்புக்கு காரகன் சுக்கிரன் இரண்டாவதாக ராகுவையும் சந்திரனையும் எடுத்துக் கொள்ளலாம்....

இங்கு சுக்கிரன் 5ம் இடமான குருவின் தனுசு வீட்டில் புதனுடன்‌ சேர்ந்து உள்ளார்...

ஒருவர் ராஜ யோகத்தை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் லக்ன பாவிகள் லக்ன சுபரின் கட்டுபாட்டில் இருக்க வேண்டும்...

அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஜாதகருக்கு நன்மைகளை அந்த கிரகம் தரும்...

இங்கு சுக்கிரன் லக்ன நண்பரான புதனுடன் சேர்ந்து மற்றொரு லக்ன நண்பரான குருவின் வீட்டில் உள்ளார்...

எனவே இந்த ஜாதகத்திற்கு சுக்கிரன் நன்மை செய்து ஆக வேண்டும்...

அடுத்ததாக மிக மிக முக்கியமான விதி சரியான பருவத்தில் சரியான திசைகள் நடக்க வேண்டும்...

ஜாதகத்தில் 1000 ராஜ யோகங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க சரியான பருவத்தில் சரியான திசா புக்திகள் நடைபெற வேண்டும்..

ரஜினியின முதல் படம் 1975ல் வெளியானது... அப்போது அவருக்கு ராகு தசை புதன் நடந்துக்கொண்டிருந்தது.

ஏற்கனவே ராகுவை 2வது சினிமா துறை காரகனாக கொள்ளலாம்‌ என கூறியிருந்தேன் அல்லவா...

எந்த ஒரு கிரகமும் ஜோதிடத்தில் தனித்து இயங்கி எந்த செயலையும் செய்யாது... 

அடுத்த விதியாக பாப கிரகங்கள் சுபர்களின் சம்மந்தத்தில் இருக்க வேண்டும்....

அனைத்து பாப கிரகங்களுக்கும் சுப காரத்துவங்களும் அசுப காரத்துவங்களும் இருக்கும்...

சுபர்‌ சம்மந்தப்பட்டு திசை நடத்தும் போது தனது சுப காரத்துவத்தையும் அசுபர் சம்மந்த பட்டு தசை நடத்தும் போது தனது அசுப காரத்துவத்தையும் ஜாதகருக்கு கொடுக்கும்..‌‌‌...

உதாரணமாக ஒரு கீழ் நிலையில் உள்ள கட்டிட தொழிலாலருக்கும் ஒரு Civil Engineers க்கும் செவ்வாயே காரகர்...

இங்கு ரஜினியின் ஜாதகத்தில் ராகு தனக்கு பிடித்த மீனத்தில் குருவின் வீட்டில் உள்ளார்...

எனவே தனது சுப பலனாக ஜாதகரை சினிமா துறையில் அறிமுக படுத்தினார்...

இல்லை எனில் ஜாதகர் பேருந்து கன்டெக்டர் வேலையிலையே இருந்திருப்பார்....

எனவே ஒருவர் ராஜ யோகத்தை பெற லக்னம் வலுத்து ஜாதக யோகாதிபதிகள் அனைவரும் பலம் பெற்று... 
லக்ன அவயோகர்கள் லக்ன சுபரின் கட்டுபாட்டில் இருந்து, பாவர்களான சனி, செவ்வாய், ராகு ஆகியோர் சுப வலுவுடன் நன்மை செய்யும் அமைப்பில் இருக்க வேண்டும்...
ஜாதகர் எந்த கலையை அல்லது தொழிலை தேர்ந்து எடுக்கிறாறோ அந்த கிரகம் மிக மிக மேன்மையான நிலையில் இருக்க வேண்டும்....

இதற்கு மேலாக நன்மை தரும் தசாபுக்திகள் சரியான வயதில் நடக்க வேண்டும்

அய்யோ... இவ்வளவு இருக்கிறது என நினைக்க தோன்றுகிறதா? ...
ராஜ யோகம் அவ்வளவு எளிதாக கிடைக்காது அல்லவா.....
,

No comments:

Post a Comment