Friday 31 May 2019

ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தை அறிவது எப்படி?

ஜாதகம் என்பது ஒரு மனிதன் பிறக்கும் போது வான்வெளியில் அமைந்துள்ள கிரகங்களின் துல்லிய நிலையை குறிக்கிறது.
ஜாதகம் ஒருமனிதன் பிறக்கும் போது உள்ள கிரக நிலையை தான் குறிக்கிறது ஆனால் ஒரு மனிதனின் நிறம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நிர்ணயம் செய்யபட்டு விடுகிறது எனவே எவ்வாறு மனிதனின் நிறத்தை அறிய முடியும் என உங்களுக்கு ஐயம் எழலாம்..

ஆனால் இதற்கு விளக்கம் மிக எளிது நீங்களும் நானும் எப்போது எந்த இடத்தில் யாருக்கு மகனாக அல்லது மகளாக பிறக்க வேண்டும் என்பதை ஏற்கனவே நம்மை படைத்த கடவுள் முடிவு செய்து விடுகிறார் எனவே நாம் எந்த நிறத்தில் இருக்கிறோமோ அதறக்கான கிரக நிலைகள் உருவாகும் போதுதான் நாம் பிறக்கிறோம் எனவே ஜாதகத்தை வைத்து உடல் நிறத்தையும் அறிய முடியும்...

உடல் நிறத்தை அறிய நவாம்சம் மிக முக்கியம் மேலும் இந்த விதியை இந்தியாவில் பிறந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும்‌.
ஜாதகத்தில் லக்னம் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளது, ராசி நாதன், சந்திரன் எந்த நவாம்சத்தில் அமைந்துள்ளார் ஆகியவையை கணக்கிட்டு ஜாதகரின் நிறத்தை அறிய முடியும்.

குருவின் வீடுகளான மீனமும் தனும் மிளிர்ந்த தங்க நிறத்தை குறிக்கும், செவ்வாயின் வீடுகளான மகரமும் விருச்சிகமும் செந்நிறத்தை குறிக்கும், சுக்கிரனின் ரிஷப துலாம் ராசிகள் வெள்ளை நிறத்தையும், புதன் பொதுவான நிறத்தையும் சந்திரன் பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் போது வெளிர் நிறத்தையும் அம்மாவாசைக்கு அருகில் இருக்கும் போது பெதுவான நிறத்தையும் குறிப்பார், சூரியன் இளஞ்சிவப்பு நிறத்தையும் சனி அடர்ந்த கருப்பு நிறத்தையும் குறிப்பார்கள்.

முதலில் லக்னம் எந்த நவாம்சத்தில் உள்ளது என காண வேண்டும் நவாம்ச லக்னம் சனியின் மகர கும்ப வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ஜாதகர் கருப்பாக இருப்பார், குருவின் வீடுகளில் நவாம்ச லக்னம் அமையும் போது நல்ல நிறத்துடன் இருப்பார்.

மற்ற அமைப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் சந்திரன் நம் உடலை குறிக்கிறார், சந்திரன் அமந்த ராசி அதிபதி சனி ஆக இருந்தால் கருப்பாக இருப்பார் மற்ற கிரகங்களாக இருக்கும் போது அந்த கிரகத்தின் தன்மை நிறத்தில் இருப்பார்...

இதில் ஒரு அமைப்பில் ஜாதகர் நல்ல நிறம் உள்ளவர் என்றும் மற்றும் ஒரு அமைப்பில் ஜாதகர் கருமை நிறம் உள்ளவர் என்ற அமைப்பும் வரும் போது ஜாதகர் பொதுவான நிறம் உள்ளவர் என கொள்ள வேண்டும்..

1) நவாம்ச லக்னம்
2) ராசி அதிபதி
3) சந்திரன் நவாம்சத்தில் அமர்ந்த ராசி

இதில் 3ம் நல்ல நிறமுடைய அமைப்பில் இருக்கும் போது ஜாதகர் நல்ல வெள்ளை நிறம் உடையவராக இருப்பர்‌. 2 அமைப்பு நல்ல நிறமுடையவை மற்றொன்று கருமை நிற அமைப்பு எனில் ஜாதகர் பொது நிறத்திற்கு சற்று அதிக நிறத்தில் இருப்பார். இவ்வாறு கணக்கிட வேண்டும்..
குறிப்பு: நவாம்ச லக்னம் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மாறுபடும் எனவே துல்லியமான பிறந்த நேரம் தேவைப்படும்

No comments:

Post a Comment