Saturday 23 February 2019

2ல் குருவிற்கு காரக பாவ நாஸ்தி ?

ஒவ்வொரு கிரகமும் தனக்கென்று பல காரத்துவங்களை கொண்டிருக்கும்‌ அதே போல் 12 பாவங்களும் தனக்கென்று பல ஆதிபத்தியங்களை கொண்டிருக்கும்..

உதாரணமாக சுக்கிரன் திருமணத்திற்கு காரகர் ஆகிறார்.. அதே போல் 7ம் பாவம் திருமணத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறது..

இங்கு... ஆதிபத்தியமும் காரகமும் இணைவது காரக பாவ நாஸ்தி என படுகிறது.. அதாவது திருமணத்திற்கு காரகனான சுக்கிரன் திருமணத்திற்கு ஆதிபத்தியம் கொண்ட 7ல் இடத்தில் இருப்பது காரக பாவ நாஸ்தி எனப்படுகிறது...

காரக பாவ நாஸ்தி அடையும் போது அந்த பலன் நடப்பதில் பிரச்சனைகள் உண்டாகும், தாமதம் உண்டாகும்...

எனவே தான் தனித்த சுக்கிரன் 7ல் இருக்க கூடாது என சொல்வதும் தனித்த குரு 5ல் இருக்க கூடாது என சொல்வதும் ஆகும்..

இதற்கு சில விதி விலக்குகளும் இருக்கின்றன...

1) வேறு கிரகங்கள் சம்மந்தம் அந்த பாவத்தில் இருந்தால் காரக பாவ நாஸ்தி வேலை செய்யாது..

2) அங்கு காரக பாவ நாஸ்தி அடையும் கிரகம் ஆட்சி பெற்றால் விதி விலக்காக கொள்ளலாம்...

இப்போது குரு தனம் என்பதற்கு காரகம் வகிக்கிறார். 2ம் இடம் தனத்திற்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.. இங்கு குரு அமர்ந்தாலும் காரக பாவ நாஸ்தியை ஏற்படுத்துவார்...

ஆனால் 2ம் ஆதிபத்தியத்தில் இருக்கும் தன்னுடைய காரகத்தை மட்டுமே பாதிப்பார்...
2ம் இடத்தில் இருக்கும் குடும்பம் , பேச்சி, வலது கண் ஆகியவற்றை எந்த பாதிப்பும் தர மாட்டார்...

அதே போல் 7ல் அமரும் சுக்கிரன் திருமணம் என்பதை மட்டுமே பாதிப்பை தருவார், 7ம் இடத்தின் மற்றொரு ஆதிபத்தியமான கூட்டு தொழிலுக்கு எந்த தீமையும் செய்ய மாட்டால்..

ஆனால் 5ல் அமரும் குரு... 5ல் இருக்கும் அனைத்தையும்‌ கெடுப்பார் காரணம் 5ம் இடத்தில் இருக்கும் அனைத்து ஆதிபத்திய பலன்களும் குருவின் காரத்துவத்திலையே வந்துவிடும்...

இவ்வாறு ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏற்படும் காரக பாவ நாஸ்தி பலனை கணிக்கலாம்...

இதுபோன்ற மேலும் பல தகவல்களுக்கு www.jothidasanmugan.blogspot.com என்ற தளத்தில் சென்று படிக்கவும்.
,

No comments:

Post a Comment