Wednesday 22 May 2019

ஏழரைச்சனி கெடுதல் மட்டும்தான் செய்யுமா?

ஏழரைச்சனி

சனி கோட்சாரமாக ஜென்ம ராசிக்கு முந்தய ராசியிலும், ஜென்ம ராசியிலும் ஜென்ம ராசிக்கு 2ல் வருவதுமான ஏழரை வருடங்கள் ஏழரைச்சனி காலம் எனப்படுகிறது. இதில் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை வருடங்களாக நகர்வார்.

இதில் முதல் இரண்டரை வருடங்களில் அதாவது ஜென்ம ராசிக்கு முந்தய ராசியில் இருக்கும் போது எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருக்வாக்கும் சூழ்நிலைகளைதான் உருவாக்குவார் தவிற பெரும்பாலும் பிரச்சனைகளை தருவதில்லை, உதாரணமாக ஒரு வாலிபன் வேலைப்பார்க்கும் இடத்தில் அல்லது கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்த ஏழரைச்சனி தொடங்குகிறது எனில் ஏழரை வருங்களில் முதல் இரண்டரை வருடங்கள் ஜாதகருக்கு காதல் தோன்றும் இதிலும் துல்லியமாக சொல்ல போனால் அந்த இரண்டரை வருடங்களில் முதல் ஒரு வருடத்தில் பெண்களின் நட்பு ஏற்படும் அடுத்த ஒன்றரை வருடங்களில் ஏதேனும் ஒரு பெண்ணுடன் காதல் தோன்றும்..

Source: Google

இத்தகைய காலகட்டத்தில் எந்த விதமான பெரிய பிரச்சனைகளோ , தொந்தரவுகளோ இருக்காது, இரண்டாவது இரண்டரை வருடத்தில் தான் பிரச்சனைகள் வரும் இந்த காலத்தில் மிகுந்த மன அழுத்தம் ஏற்படலாம்.. வாழ்நாள் முடியும் வரை இந்த காலத்தில் நடந்தவை ஜாதகருக்கு நினைவு இருக்கும்..

இதில் இன்னும் துல்லியமாக சொல்ல போனால், ஜென்ம நட்சத்திரத்திற்கு முந்தய நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு எதிராக பல பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கும் அல்லது ஜாதகருக்கு எதிராக ஏற்கனவே இருந்த பிரச்சனைகள் வலுவடையும். ஜென்ம நட்சத்திரத்தை சனி கடந்த பின் தோன்றிய பிரச்சனைகள் மிகவும் மெதுவாக மறைய தொடங்கும்.
கடைசி இரண்டரை வருடங்களில் ஜாதகர் பல அனுபவங்களை கடந்த கால வாழ்க்கை மூலம் கற்றிருப்பார்.

இதில் காதல் என்பது ஒரு எடுத்துக்காட்டாக தான் சொல்லப்பட்டுள்ளது, பெரும் பண கஷ்டமும், தொழிலில் பிரச்சனைகளும் இந்த கால கட்டங்களில் ஏற்படலாம்.
எந்த பிரச்சனை ஏழரை சனி காலத்தில் வரும் என்பதை அப்போது ஜாதகருக்கு நடக்கும் தசா புக்திகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு ஜாதகர் தன் வாழ்நாளில் எது பாதிக்கப்பட்டால் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆவாரோ அது சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்..

ஒரு கல்லூரி முடித்த வாலிபர் காதலில் எந்த பிரச்சனை வந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆள்ஆக மாட்டார் எனில் அவருக்கு காதல் விவகாரங்களில் பிரச்சனை வராது, வேறு எதில் பிரச்சனை வந்தால் ஜாதகருக்கு மன அழுத்தம் வருமோ அதில் தான் பிரச்சனைகள் உண்டாகும்.

ஏழரை சனி நடைபெரும் காலங்களில் காதலிக்கவோ , புதிய தொழில் தொடங்கவோ, இருக்கும் வேலையை விடுவதோ, புதிய முயற்சிகள் மேற்கொள்வதையோ தவிர்த்தல் நலம். யாரையும் நம்பி முன்பணமோ , பணமோ கொடுக்க கூடாது
சில நேரங்களில் குழந்தைகளின் ஏழரை சனி தகபனையும் தாயையும் பாதிக்கும், ஆனால் அந்த நேரத்தில் தாயின் ஜாதகத்திலும், தகப்பனின் ஜாதகத்திலும் கஷ்டபடும் அமைப்பு இருந்தால் மட்டுமே இது பெரும்பாலும் நடைபெரும்.

ஏழரைசனிக்கு விதிவிலக்கு இல்லையா?

கண்டிப்பாக ஜோதிடத்தில் ஒரு  விதிக்கு பல விதி விலக்குகள் உண்டு. ஜாதகத்தில் சனி வலிமை குறைந்து சுபர்களின் சம்மந்தம் பெருவது, பாபர்களில் சம்மந்தம் பெறாமல் சுபர்களின் வீட்டில் அமர்வது, நவாம்சத்தில் சுபர்களுடன் சேர்ந்து சுபர்களின் வீட்டில் இருப்பது, லக்னத்திற்கு 6,8,12ல் மறைந்து கேது சம்மந்தம் பெருவது போன்ற நிலைகளில் சென்ம ஜாதகத்தில் சனி இருந்தாலும்,
ஜென்ம ராசி மகரம், கும்பமாக இருந்து சனி பாபர்களின் சம்மந்தம் பெறாமல் இருந்தாலும் ஏழரை சனியில் தாக்கம் குறைவாக இருக்கும்.
அதே நேரத்தில் ஜென்ம ஜாதகத்தில் சனி உச்சம் பெற்று பாவர்களின் சம்மந்தம் பெற்று, நவாம்சத்திலும் பாவர்களின் சம்மந்தம் பெறுவது ஆகியவை ஏழறை சனியின் தாக்கத்தை அதிகரிக்கும்..

ஏழரை சனி பரிகாரங்கள்

ஏழரைசனி காலங்களில் சனியின் ஸ்தலங்களுக்கு செல்ல கூடாது. உடல் ஊனம் பெற்றவர்களுக்கு சனி கிழமைகளில் பகல் 1 முதல் 2 மணிவரை உதவிகள் செய்யலாம்,
அருகில் இருக்கும் பழைய சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு நெய் தீபம் சனி கிழமைகளில் காலை 6 to 7 மணிவரை ஏற்றலாம்...
,

No comments:

Post a Comment