Sunday 17 February 2019

ராஜ யோகம் தரும் ராகு திசை

வணக்கம் நண்பர்களே...

ஜோதிடத்தில் ராகுவின் நிலைகளையும், நன்மை தீமை தருவதையும் பற்றி கணிப்பது சற்று சிரமமான விசயம்...

ஏன் எனில் ராகு திசை சில நிலைகளில் ஒருவரை கோடிகளுக்கு அதிபதி ஆக்கும் ..
அதே நேரம் வேறு சில நிலைகளில் கோடிகளுக்கு அதிபதியை கூட பிச்சை காரனாக்கும்...

பொதுவாக ஒரு லக்கத்திற்கு சில கிரக்ங்கள் நன்மை செய்யும் என்றும் சில கிரகங்கள் நன்மை செய்யாது என்னும் எடுத்துக்கொள்ளலாம்...

உதாரணமாக மீன லக்னத்திற்கு செவ்வாய் பெரும்பாலும் நன்மையையே செய்வார்....

அதே நேரம் மீன லக்னத்திற்கு சுக்கிரன் கெடுதல்களை செய்வார்...

இவ்வாறு ஒவ்வொரு லக்னத்திற்கும் பார்த்துக்கொள்ள முடியும்...

அதே நேரத்தில் ராகு, கேதுக்கள் இந்த லக்னத்திற்கு நன்மை செய்வார் இந்த லக்னத்திற்கு தீமை செய்வார் என கூறிவிட முடியாது...

ராகு நன்மை செய்ய வேண்டும் என்றால் அவர் 3,6,11,12ல் இருக்க வேண்டும்...
சரி இதில் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பது தான் பதில்.

6, 12ல் இருக்கும் ராகு சுபர்களின் பார்வையை பெற கூடாது அதே நேரத்தில் 3,11ல் இருக்கும் ராகு சுபர்களின் சம்மந்தத்தை பெற‌ வேண்டும்...

அதே போல் ராகு ராஜ யோகத்தை செய்ய வேண்டும் எனில் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனம் ஆகிய வீடுகளில் இருக்க வேண்டும்...

மேலும் இந்த வீடுகள் லக்னத்தில் இருந்து 3,6,11,12 ஆக இருக்க வேண்டும்...

எந்த நிலையிலும் ராகு கேதுக்கள் லக்ன பாவரின் சம்மந்தம் பெற கூடாது...
 உதாரணமாக தனுசு லக்னமாக அமைந்து 6ம் வீடான ரிஷபத்தில் ராகு கேது அமர்ந்தால் ராகு சுக்கிரன் என்ன பலன்களை தனுசு லக்னத்திற்கு கொடுப்பாரோ அதே பலன்களைதான் கொடுப்பார் காரணம் ராகு இருப்பது சுக்கிரனின் வீடு....

இங்கு ராகு 6ல் இருந்தால் நன்மை செய்வார் என்ற விதி பொருந்தாது...

ராகு கேந்திரங்களில் இருப்பது கூட சிறப்புதான் ஆனால் கேந்திரத்தில் இருக்கும் போது திரிகோணாதிபதியின் சம்மந்தம் பெற வேண்டும்...

இந்நிலைகளில் ராகு கேந்திர திரிகோண பலன்களை அள்ளி கொடுப்பர்...

அதே போல் திரிகோணத்தில் ராகு இருப்பது சிறப்பு இல்லை என்றாலும் அங்கு ஒரு கேந்திராதிபதியுடன் சேர்க்கை பெறுவது ராகுவை நன்மை செய்ய வைக்கும்...

ராகு மிக பெரிய நன்மைகளை செய்ய வேண்டும் எனில் 3,11ல் இருந்து அந்த வீடுகள் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனமாக இருந்து லக்ன சுபர்களின் பார்வை அல்லது சம்மந்தம் பெற்று சுபர்களின்‌ சம்மந்தத்தையும் பெற வேண்டும்...

இதுவே... ராகு பூரணமாக ராஜ யோகம் செய்யும் அமைப்பு....

இதற்கு அடுத்தபடியாக... 6,12ல் இருந்து
அந்த வீடுகள் மேசம்,கடகம்,கன்னி,மகரம் அல்லது மீனமாக இருந்து ராகுவிற்கு எல்லா கேந்திரங்களிலும் லக்ன சுபர்கள் பலம் பெற்று இருக்க வேண்டும்...

இந்த நிலைகளில் ராகு மிக பெரிய‌ராஜ யோகங்களை தன் திசைகளில் செய்வார்...அதே நேரம் ராகு 6,12ல் இருந்து சுபர்களின் சேர்க்கை பார்வை பெறும்‌ போது அந்த பாவம் பலம் பெற்று கடன், நோய், விரயம் ஆகியவை ஏற்படும்...

இந்நிலைகளில் ராகுவின் கேந்திரத்தில் லக்ன சுபர்கள் இருப்பின் கலப்பு பலன்கள் ஏற்படும்...

,

2 comments:

  1. சனி செவ்வாய் 9இருந்தால்

    ReplyDelete
  2. தனுசு லக்னம் ,10 இல் சனி செவ்வாய் (வ) , சனி திசை எப்படி அய்யா ?

    ReplyDelete